பாய்ஸ் மணிகண்டனை மாடர்ன் சாமியார் என பாராட்டிய விஜய் சேதுபதி!
நடிகர் பாய்ஸ் மணிகண்டன் பாய்ஸ் படத்தின் மூலம் ஒரே நாளில் உலகப் புகழ்பெற்றார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கிடைத்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வாய்ப்பும் இல்லாமல் சினிமாவை விட்டே ஒதுங்கினார்.
இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் லுக் வெளியீட்டு விழாவில் பெசிய விஜய் சேதுபதி மணிகனடனைப் பற்றி பேசினார்.
அவரது பேச்சில் “நான் மணிகண்டனின் நேர்காணல் ஒன்றை பார்த்தேன். அதில் அவர் தன்னம்பிக்கையுடன் பேசியிருந்தார். அவர் பேசுவது ஒரு மாடர்ன் சாமியார் போல உள்ளது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் நடிப்பு எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.