விஜய்யின் மெர்சல் பாடல் டீஸர் செய்த சாதனை!!

Sasikala| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (11:00 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் சரியாக புதன் நள்ளிரவு 12 மணிக்கு சிங்கிள் பாடலுக்கு பதிலாக 30 வினாடிகள் வீடியோ டீசர் வெளியானது.

 
விஜய்யின் ஆளப்போறன் தமிழன் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில், அதன் டீஸர் நேற்று நள்ளிரவு  வெளிவந்தது. வெளிவந்த சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பார்வைகளை பெற்றது. அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்களும், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வியூஸ் பெற்றுள்ளது.
 
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னையில் ஒரு பிரம்மாண்ட விழாவில்  வெளியிடப்படவுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :