செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (12:06 IST)

விஜய்யை தொடரும் குழந்தை ராசி

விஜய்யை தொடரும் குழந்தை ராசி

தெறியில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்தார். படத்தின் வெற்றியில் நைனிகாவின் நடிப்புக்கு கணிசமான பங்குண்டு.


 


ஆக்ஷன் படத்தில் ஒரு குழந்தை இடம்பெறும் போது ஆக்ஷனின் காரம் மட்டுப்பட்டு குடும்ப ஆடியன்சின் ருசிக்கு படம் மாறிவிடும்.
 
தெறியைத் தொடர்ந்து விஜய் தற்போது நடித்துவரும் பரதனின் படத்திலும் ஒரு குழந்தை நட்சத்திரம் இடம்பெறுகிறார். அந்த குழந்தையின் பெயர், மோனிகா சிவா.
 
விஜய்யின் 60 -வது படம் தவிர்த்து சங்கு சக்கரம், கட்டப்பாவை காணோம் ஆகிய படங்களிலும் இந்த குழந்தை நட்சத்திரம் நடித்து வருகிறார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்