திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (20:59 IST)

விஜய்யை பார்க்க திடீரென குவிந்த ரசிகர்கள்... லியோ ஷூட்டிங் ஸ்பாட்டி பரபரப்பு - வீடியோ!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
 
2000 டான்ஸர்கள் ஆட பிரம்மாண்டமான உருவான நா ரெடி பாடல் அண்மையில் வெளியாகி யூடியூபில் மிகப்பெரிய சாதனை படைத்தது வருகிறது. இந்நிலையில் லியோ ஷட்டிங் சென்னையில் நடந்து வந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் ஆந்திராவின் Talakona என்ற இடத்தில் தொடங்கி இருக்கிறார்கள். அங்கு  விஜய்யை பார்க்க திடீரென அவரின் ரசிகர்கள் குவிந்து ஆக்ரோஷ சத்தத்துடன் கூச்சலிட்டனர். இதனால் படக்குழு அதிர்ச்சி ஆகிவிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்நிலையில் இந்த படத்துக்காக பிரம்மாண்டமான பாடல் ஒன்றை படமாக்கி வந்தது படக்குழு. அந்த பாடலில் சுமார் 2000 டான்ஸர்கள் ஆட உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக நடந்த  இப்பாடல் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் முடிந்துள்ளது.