ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:07 IST)

நாளை முதல் விஜய் மக்கள் இயக்க நூலகம்.. சென்னையில் திறந்து வைக்கும் புஸ்ஸி ஆனந்த்..!

தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நூலகம் திறந்து வைக்கப்படும் என சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் நாளை முதல் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் நூலகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் கட்டமாக  தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி விஜய் நூலகம் திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தளபதி விஜய் நூலகத்தை திறந்து வைக்கிறார்.
 
இதனை அடுத்து நவம்பர் 23ஆம் தேதி அடுத்த கட்டமாக தமிழகத்தில் 21 இடங்களில் தளபதி விஜய் நூலகம் விரிவுபடுத்த உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த நூலக திறப்புக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva