எந்தந்த படத்தின் காப்பி லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ… பட்டியல் போடும் நெட்டிசன்ஸ்!
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நேற்று இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆனது. இந்த படத்திற்கு லியோ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இரண்டு நிமிடங்களுக்கும் மேலான இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளியாகி சில மணி நேரங்களுக்குள்ளாகவே இந்த வீடியோ எந்த படத்தின் காப்பி என கண்டுபிடித்து நெட்டிசன்கள் பட்டியலிட்டு வருகின்றனர். அதில் சில்வர்ஸ்டன் ஸ்டோலன் நடித்த ராம்போ மற்றும் நாகார்ஜுனாவின் கோஸ்ட் படங்களின் ப்ரமோஷன் வீடியோக்களை ஒத்திருப்பதாக பகிர்ந்து ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.