'என்.ஜி.கே' தாமதத்திற்கு விஜய் காரணமா?

Last Modified புதன், 1 மே 2019 (09:18 IST)
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழாவில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, 'என்.ஜி.கே. படத்தின் கதையை போலவே கடந்த ஆண்டு இன்னொரு படம் வெளியானதால் இந்த படத்தின் கதையில் சில திருத்தங்கள் செய்ததாக கூறினார்.
இதனையடுத்து அவர் குறிப்பிட்ட அந்த படம் எது? என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது. உண்மையில் 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று விஜய்யின் சர்கார்' படத்துடன் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 'சர்கார்' படத்தின் கதையும் 'என்.ஜி.கே' படத்தின் கதையும்
கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது தெரிய வந்ததால் என்.ஜி.கே படக்குழுவினர் கதையை மாற்றியதாகவும், அதனால் தான் இந்த படம் காலதாமதம் ஆனதாகவும் வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது
மேலும் ஒருசிலர் 'என்.ஜி.கே' படத்தின் கதை, விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படத்தின் கதைபோல் இருந்ததால் மாற்றப்பட்டதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இரண்டு விஜய்களில் ஒருவரால் தான் 'என்.ஜி.கே. திரைப்படம் தாமதமானதாக தெரிகிறதுஇதில் மேலும் படிக்கவும் :