வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (16:39 IST)

1000 தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்? அப்ப மற்ற படங்கள் பொங்கலுக்கு இல்லையா?

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என்றும் ஓடிடியில் ரிலீஸ் இல்லை என்றும் சமீபத்தில் படக்குழுவினர் உறுதி செய்தனர். அனேகமாக இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படம் மட்டுமின்றி பொங்கல் தினத்தில்  சிம்புவின் ஈஸ்வரன் கார்த்தியின் சுல்தான், தனுஷின் ஜகமே தந்திரம் ஆகிய படங்களும் பொங்கலுக்கு ரிலீஸாக திட்டமிடப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு மட்டும் ஆயிரம் தியேட்டர்கள் தமிழகத்தில் கொடுக்கப்பட்டதாகவும் திரையரங்கு உரிமையாளர்களை ‘மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் திரையரங்குகள் தருகிறோம் என்றும், வேறு எந்த படத்திற்கும் தரமாட்டோம் என்று கூறியதாகவும் ஒரு சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர் 
 
உண்மையில் அப்படி எந்த உத்தரவாதத்தையும் திரையரங்கு உரிமையாளர்கள் தரவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. அனைத்து நடிகர்களின் படங்களும் எங்களுக்கு தேவை என்றும் ‘மாஸ்டர்’ என்ற ஒரு படத்திற்கு மட்டும் ஆயிரம் தியேட்டர்கள் கொடுக்க முடியாது என்றும் ஈஸ்வரன், ஜகமே தந்திரம், சுல்தான் ரிலீஸ் ஆனால் அந்தப் படத்திற்கும் நாங்கள் அதிக அளவில் தியேட்டர்கள் கொடுப்போம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
எனவே ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ரிலீஸ் ஆனாலும் மற்ற படங்களும் ரிலீஸ் ஆகும் என்றும் அதிகபட்சமாக ‘மாஸ்டர்’ படத்திற்கு 500 முதல் 600 திரையரங்குகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது