விஜய்யின் ‘நா ரெடி’ பாடல் ரிலீஸ்.. என்ன ஒரு பிரமாண்டம்..!
தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நா ரெடி என்ற பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களுடன் தளபதி விஜய் தனது பாணியில் செமையாக டான்ஸ் ஆடிய நிலையில் இந்த பாடலின் பிரம்மாண்டத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த பாடல் திரையில் பார்க்கும்போது நிச்சயம் ஆச்சரியம் ஏற்படும் என்பது மட்டுமின்றி தியேட்டரில் எழுந்து ஆட வைக்கும் என்பது உறுதி.
விஜய் அனிருத் அசல் கோலார் உள்ளிட்டோர் பாடிய இந்த பாடலை விஷ்ணு எடாவன் எழுதி உள்ளார் என்பதும் இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் பெரும் குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் அறிமுக பாடலாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் நிச்சயம் மற்ற பாடல்கள் போலவே வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.