‘பீஸ்ட்’ படத்தில் அரபிக் குத்துப்பாட்டு: சன்பிக்சர்ஸ் அப்டேட்
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் பேசும் ஜாலியான காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது