Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் படத்தில் பாகுபலி கதாசிரியரின் பங்கு என்ன?

Sasikala| Last Modified புதன், 1 பிப்ரவரி 2017 (15:04 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு பாகுபலி கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர  பிரசாத் கதை, திரைக்கதை எழுதியிருப்பதாக கூறப்பட்டது. பிறகு இந்த செய்தி அப்படியே அமுங்கிப் போனது.

 
விஜய்யின் 61 -வது படமான இதில் விஜயேந்திர பிரசாத்தின் பங்களிப்பு என்ன?
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை மட்டும் அமைத்துள்ளார். கதை, வசனம்  அட்லியினுடையது. இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸுக்கு இதுதான்  100 -வது படம். சுந்தர் சி. இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் சங்கமித்ரா படம்தான் 100 வது படம் என்று கூறி  வந்தனர்.
 
விஜய் படம் முந்திக் கொண்டதால் 100 வது படம் என்ற பெருமை விஜய் படத்துக்கு கிடைத்துள்ளது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :