வியாழன், 2 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (23:37 IST)

விஜய், தனுஷ் பட தயாரிப்பாளார் ரூ.10 லட்சம் நிதி உதவி !

விஜய், தனுஷ் பட தயாரிப்பாளார் ரூ.10 லட்சம்  நிதி உதவி !
கொரொனா தடுப்புப் பணிகளுக்கு தனுஷ் படத் தயாரிப்பாளார் கலைப்புலி எஸ்.தாணு ரூ. 10 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரொனா இரண்டாவது அலை பரவல் தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரொனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கொரொனா தடுப்பு நிவாரண நிதிக்கு நேற்று விஜய் சேதுபதி ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். 
விஜய், தனுஷ் பட தயாரிப்பாளார் ரூ.10 லட்சம்  நிதி உதவி !

இந்நிலையில் இன்று துப்பாக்கி, அசுரன் ,கர்ணன் உள்ளிட்ட படங்களில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். அத்த்துடன் முதல்வரின் நடவடிக்கைகளைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.