வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2018 (18:14 IST)

ஜீ.வி.பிரகாஷைப் பாராட்டிய விஜய்

‘நாச்சியார்’ படத்தைப் பார்த்த விஜய், ஜீ.வி.பிரகாஷின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார் ஜீ.வி.பிரகாஷ். படத்தைப் பார்த்த விஜய், அவரைப் பாராட்டியுள்ளார்.
 
இதுகுறித்துப் பேசிய ஜீ.வி.பிரகாஷ், “நாச்சியார் படம் பார்த்துவிட்டு விஜய் அண்ணா எனக்கு மெசேஜ் செய்தார். கடந்த வருடம் அவருடைய பிறந்தநாளில் சந்தித்தபோது, பாலா படத்தில் நடிப்பதற்காக வாழ்த்து சொன்னார்.
 
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நன்றாக இருப்பதாகக் கூறியவர், நான் தேசிய விருது பெறுவது உறுதி என்றார். அவர் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அப்படி எனக்குத் தேசிய விருது கிடைத்தால், அதை விஜய் அண்ணாவுக்கு சமர்ப்பிப்பேன்” என்றார்.