வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (16:37 IST)

உடல்நலம் சரியில்லாத தயாரிப்பாளருக்கு நம்பிக்கைக் கொடுத்த விஜய்!

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தயாரிப்பாளருக்கு விஜய் தொலைபேசி செய்து அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய் நடித்த மெர்சல் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு லேசான மாரடைப்பு தான் என்றும் அதனால் அவர் ஓரிரு நாட்களில் சிகிச்சை மேற்கொண்டு அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு அழைத்த நடிகர் விஜய் அவருக்கு ஆறுதல் கூறி பின்னர் விரைவிலேயே அவர்கள் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துத் தருவதாக உறுதி அளித்துள்ளாராம். மெர்சல் படத்தின் தயாரிப்பின் போதுதான் தேனாண்டாள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய அளவில் கடன் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.