வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:18 IST)

மீண்டும் வெடித்த விஜய் எஸ் ஏ சந்திரசேகர் மோதல் – கடுப்பில் விஜய் செய்த செயல்!

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரு மாதங்களுக்கு முன்னர் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. அதை தொடர்ந்து விஜய்யின் எதிர்ப்பால் அந்த கட்சியை கலைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். எஸ் ஏ சியின் இதுபோன்ற செயல்களால் விஜய் அவரிடம் பேசுவதே இல்லை என்று கூட சொல்லப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களாக அமைதியாக இருந்த எஸ்.ஏ.சி இப்போது தனது பெயரிலேயே அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கட்சி குறித்த அறிவிப்புகள் பொங்கலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதனால் இப்போது மீண்டும் எஸ் ஏ சி மீது அதிருப்தியில் இருக்கிறாராம் விஜய். அந்த கோபத்தில் தனது தந்தையின் செல்போன் எண்ணையே தனது மொபைலில் ப்ளாக் செய்து வைக்கும் அளவுக்கு போயுள்ளாராம். தந்தை மகன் இடையே எழும் இந்த கருத்து வேறுபாடுகளில் அவர்களின் குடும்பத்தினர் அதிருப்தியில் உள்ளனராம்.