1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2017 (11:10 IST)

பாலிவுட் படத்தில் விஜய்யின் ‘வர்லாம் வர்லாம் வா’ பாடல்

‘பைரவா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வர்லாம் வர்லாம் வா’ பாடல், ஒரு ஹிந்திப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


 


ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள ஹிந்திப் படம் ‘கோல்மான் எகெய்ன்’. இந்தப் படத்தில் பரினீதி சோப்ரா, தபு ஆகியோர் நடித்துள்ளனர். ‘பைரவா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வர்லாம் வர்லாம் வா’ பாடல், ரோகித் ஷெட்டிக்கு ரொம்பவே பிடிக்குமாம். எனவே, இந்தப் பாடலை ‘கோல்மால் எகெய்ன்’ படத்தில் சேர்த்துவிட்டார்.

இதுகுறித்து ‘பைரவா’ படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், விஜய், பாடலைப் பாடிய அருண்ராஜ் காமராஜ், அஜய் தேவ்கன், ரோகித் ஷெட்டி ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.