யோகிபாபுவை மெர்சலாக்கிய தளபதி விஜய்


sivalingam| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (22:59 IST)
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடத்தில் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் வடிவேலு, சத்யன் மற்றும் யோகிபாபு ஆகிய மூன்று நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.


 
 
இந்த நிலையில் சமீபத்தில் யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டபோது, யோகிபாபுவின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு விஜய், அட்லியிடம் பரிந்துரை செய்ததாகவும் அதை கேள்விப்பட்டு யோகிபாபு மெர்சலாகிவிட்டதாகவும் கூறினார்.
 
விஜய் நடித்த 'வேலாயுதம்' படத்தில் ஏற்கனவே யோகிபாபு நடித்திருந்தாலும் அந்த படத்தில் தான் கூட்டத்தோடு கூட்டமாக இருந்ததாகவும், ஆனால் விஜய்யின் பரிந்துரையால் 'மெர்சல்' படத்தில் தனது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவத்தை அட்லி கொடுத்துள்ளதாகவும் யோகிபாபு மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :