1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:57 IST)

தயவு செய்து கொலையாளியை ரயில்ல தள்ளி விட்டு தண்டியுங்கள்: விஜய் ஆண்டனி

vijay antony
கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளியை அதேபோல் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யுங்கள் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்
 
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி காரணமாக அவர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் கொலையாளிகளை உடனே தண்டிக்கும்படி நடிகர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்
 
Edited by Mahendran