புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:39 IST)

என்ன அதுக்குள்ள வந்துடுச்சு… பிரபல ஓடிடி தளத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ ரிலீஸ்!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான மழை பிடிக்காத மனிதன் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

படம் வெளியான அன்று இயக்குனர் விஜய் மில்டன் வெளியிட்ட ஒரு வீடியோ சர்ச்சைகளைக் கிளப்பியது. அதில் தன்னுடைய அனுமதி இல்லாமல் படத்தில் ஒரு நிமிடக் காட்சியை இணைத்துவிட்டார்கள். அதனால் படத்தின் த்ரில்லர் தன்மையே போய்விட்டது என்று கூறியிருந்தார். பின்னர் அந்த ஒரு நிமிடக் காட்சி நீக்கப்பட்டது. ஆனாலும் படம் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை. இதனால் வெகு விரைவிலேயே படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது.

இந்நிலையில் படம் வெளியாகி பதிமூன்றே நாட்களில் இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. வழக்கமாக திரையரங்குகளில் படம் வெளியாகி 28 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸாகும். ஆனால் இந்த படம் 2 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸாகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.