திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:22 IST)

ரம்ஜான் தினத்தில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம்!

விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படம் ரம்ஜான் தினமான மே 14-ஆம் தேதி வெளியாகும் என சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
விஜய் ஆண்டனி நடிப்பில் அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான திரைப்படம் கோடியில் ஒருவன். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் கோடியில் ஒருவன் திரைப்படம் மே 14-ஆம் தேதி ரம்ஜான் திருவிழா அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற போதிலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது