1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (06:40 IST)

ஒரே வேடத்தில் விஜய்-தனுஷ்: தற்செயலா? திட்டமிட்டா?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த மூன்று வேடங்களில் ஒன்று மேஜிக்மேன் வேடம் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம்



 


இந்த நிலையில் தனுஷ் தற்போது நடித்து வரும் ஹாலிவுட் படத்திலும் அவர் மேஜிக்மேன் வேடத்தில் நடித்து வருகிறாராம். விஜய்யும் தனுஷூம் ஒரே நேரத்தில் ஒரே கேரக்டரில் நடித்து வருவது இதுதான் முதல் முறை என்றும், இது இருவருமே திட்டமிடாமல் தற்செயலாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேஜிக்மேன் வேடத்தில் நடிக்கும் தனுஷ், இதற்காகவே நிஜமான மேஜிக்மேனை அழைத்து மேஜிக் பழகி வருவதாகவும், தன்னுடைய கேரக்டர் மிக இயல்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் ஆர்வத்துடன் மேஜிக் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.