திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (09:43 IST)

விஜய் & அஜித் இணைந்து நடிக்கும் படம்…? …வெங்கட்பிரபுவின் tweet சொல்வது என்ன?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அஜித் இருவரும் இணைந்து ஒரு பேன் இந்தியா படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அஜித்.  ரஜினி கமல் ஒப்பீடு போல அடிக்கடி அஜித்- விஜய் ஒப்பீடு நடந்து இருதரப்பு ரசிகர்களுக்கும் அடிக்கடி வலைதளங்களில் மோதல்களும் நடந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழும்பும்.

இந்நிலையில்தான் விஜய், அஜித் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் கங்கை அமரன். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், அஜித் இணைந்து நடிக்கும் பேன் இந்தியா லெவல் படம் ஒன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவலில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று திரையுலகைச் சேர்ந்த பலரே கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்தான் இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு டிவீட்டைப் போட்டுள்ளார். GIF புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர் அதில் ‘ஒருவர் இங்கு எனன் நடக்கிறது’ என ஆச்சர்யமாக பார்க்கும் விதமாக உள்ளது அந்த புகைப்படம். இதன் மூலம் அப்படியெல்லாம் பேச்சுவார்த்தை நடக்கவே இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளதாக ரசிகர்கள் புரிந்துகொள்ளலாம்.