வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (13:16 IST)

பிப்ரவரி 2 தொடங்குகிறது விஜய், அட்லி படம்

பைரவா திரையரங்களில் இன்னும் கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கும் நிலையில், பிப்ரவரி 2 விஜய்யின் புதிய படம்  தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
அட்லி இயக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, காஜல், சமந்தா நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கியமான வேடம் ஒன்றில் ஜோதிகா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 2 சென்னையில் தொடங்கி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில்  தொடரவிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் தாடி மீசையுடன் கெட்டப்பை மாற்றி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.