வெள்ளி, 19 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (12:00 IST)

நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய நெட்பிளிக்ஸ் – விக்னேஷ் சிவன் ரியாக்‌ஷன்!

நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய நெட்பிளிக்ஸ் – விக்னேஷ் சிவன் ரியாக்‌ஷன்!
நடிகை நயன்தாராவை புகழ்ந்து நெட்பிளிக்ஸ் வாழ்த்து சொன்ன நிலையில் அதை மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார் விக்னேஷ் சிவன்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் நயன்தாராவின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் உருகி உருகி ரொமான்ஸாக ஒரு நயன்தாரா பதிவு செய்துள்ளார். ஹாப்பி பர்த்டே என் தங்கமே என்று குறிப்பிட்டு அதன் பின்னர் இந்த உலகில் உள்ள எல்லா நன்மைகளையும் உங்களுக்கு கடவுள் வழங்குவார் என்றும் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் நேர்மையாக இருக்கும் நீங்கள் உயர உயர பறந்து கொண்டே இருப்பீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய நெட்பிளிக்ஸ் – விக்னேஷ் சிவன் ரியாக்‌ஷன்!


இதைப் போல பலரும் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவிக்க நெட்பிளிக்ஸ் தெரிவித்த வாழ்த்து கவனத்தை ஈர்த்தது. அதில் ‘நீங்கள் நயனாக இருக்கலாம் ஆனால் எப்பொழுதுமே 10 / 10 எடுக்கும் நடிகை தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்திருந்தது. இதை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன் ஐ படத்தில் விக்ரம்மை பார்த்து வில்லன் நடிகர் பொறாமைப்படும் காட்சியின் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘யாருடா இவங்க நமக்கே டஃப் கொடுப்பான் போல இருக்கே’ என கலாய்த்துள்ளார்.