திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (12:49 IST)

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: புரமோஷன் வீடியோவை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்!

nayanthara
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் திருமணம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த திருமண வீடியோவை ஒளிபரப்பு உரிமையை நெட்வொர்க்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய் கொடுத்து பெற்று உள்ளதாக கூறப்பட்டது
 
மேலும் இந்த திருமண வீடியோவை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய தகவல்கள் வெளியான நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோ விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
 
இந்த நிலையில் இது குறித்த புரமோஷன் வீடியோவை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த புரமோஷன் வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்தும் விக்னேஷ் சிவன் நயன்தாரா குறித்து கூறிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன
 
மேலும் இந்த வீடியோ விரைவில் வெளியாகும் என நேற்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது