1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (11:27 IST)

திரும்ப திரும்ப படம்பிடிக்கும் விக்னேஷ் சிவன்… காத்து வாக்குல ரெண்டு காதல் தாமதம்!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாக சொல்லப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூன்று பேரும் நடிக்கும் காட்சிகள் பாண்டிச்சேரியில் நடந்தது. இந்நிலையில் படத்தில் விஜய் சேதுபதி சம்மந்தபட்ட காட்சிகளை விக்னேஷ் சிவன் மீண்டும் மீண்டும் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. படமாக்கப்பட்ட காட்சிகளில் அவருக்கு திருப்தி இல்லாததால் இவ்வாறு செய்வதாகவும், அதனால் படம் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.