வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (17:17 IST)

நெட்பிளிக்ஸுக்காக படங்களை வாங்குகிறாரா விக்னேஷ் சிவன்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் மூலம் வாங்கும் படங்களை எல்லாம் நெட்பிளிக்ஸில் ரிலிஸாக செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனராக அறியப்பட்ட நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இப்போது தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் உருமாறியுள்ளார். தனது ரௌடி பிக்சர்ஸ் மூலமாக ராக்கி, கூழாங்கல் மற்றும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களை வாங்கியுள்ளார்.

ஆனால் இந்த படங்களை எல்லாம் அவர் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப் போவதில்லையாம். அதற்கு பதிலாக நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்ய உள்ளாராம். சமீபத்தில் பாவக்கதைகள் திரைப்படத்தை  நெட்பிளிக்ஸுக்காக இயக்கியதை அடுத்து அதன்  மூலம் ஏற்பட்ட பழக்கத்தை வைத்து இப்போது நெட்பிளிக்ஸுக்காக வாங்கியுள்ளாராம்.