1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (11:24 IST)

செலவாகும் ப்ரோ... திருமணம் தாமதம் குறித்த ரசியத்தை உடைத்த விக்கி!

நயன்தாராவுடன் திருமணம் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார். 

 
நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்தில் பணிபுரிந்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். இவர்கள் அவ்வ்ப்போது வெளிநாடுகளுக்கு பயணித்து புகைப்படங்களை இணையத்தில் பதவிட்டு வைரலாக்குவார்கள். இந்நிலையில் இவர்களது திருமணம் எப்போது என பலர் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். 

 
அந்த வகையில் விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சண்டே கேள்வி நேரம் என்ற கேப்ஷனில் சாட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர் திருமணம் பற்றி கேள்வி கேட்க விக்னேஷ் சிவன், ரொம்ப செலவாகும் ப்ரோ.. கல்யாணம் மற்ற விஷயங்களுக்கு. அதனால் கல்யாணத்துக்காக காசு சேர்த்துட்டு இருக்கேன். கொரோனா முடியட்டும்னு காத்திருக்கேன் என பதிலளித்துள்ளார்.