வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (08:39 IST)

ஜனவரி 31 ஆம் தேதி ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்படும் விடுதலை திரைப்படம்!

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது.

இந்நிலையில் விடுதலை 1 மற்றும் 2 ஆகிய இரண்டு பாகங்களும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளதாக நடிகர் சூரி அறிவித்துள்ளார்.

இதையடுத்து ஜனவரி 31 ஆம் தேதி இந்த படங்கள் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கலந்துகொள்ள வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் ரோட்டர்டாம் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.