ரஜினி படத்தில் நடிக்கிறேனா...? வித்யா பாலன் பதில்


bala| Last Modified வியாழன், 2 மார்ச் 2017 (16:22 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் வித்யா பாலன் நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இது குறித்து கேட்டதற்கு வித்யா பாலன் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

 

கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித்துக்கு கால்ஷீட் தந்துள்ளார் ரஜினி. தனுஷின் வுண்டர்பார் இதனை தயாரிக்கிறது. கபாலியில் வித்யா பாலனிடம்தான் முதலில் கால்ஷீட் கேட்டனர். அவர் மறுத்ததால் வாய்ப்பு ராதிகா ஆப்தேக்கு சென்றது.

இப்போதும் வித்யா பாலனிடம்தான் நாயகியாக நடிக்க கேட்டுள்ளனர். இது குறித்து கேட்டபோது, இன்னும் சில நாள்களில் தெரியும் என்று வித்யா பாலன் பதிலளித்துள்ளார். அவரது பதில், ரஜினி படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்வதாக உள்ளது.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :