வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 7 ஜனவரி 2024 (07:55 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆனவர் இவரா? பார்வையாளர்கள் அதிருப்தி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்படுபவர் மாயா என்றுதான் அனைத்து பார்வையாளர்களும் நினைத்துக் கொண்டிருந்தனர்

ஆனால் அவருக்கு சேனல் சப்போர்ட் மட்டுமின்றி கமல்ஹாசனின் சப்போர்ட்டும் இருப்பதால் பல வாரங்களாக அவர் வெளியேறாமல் இருந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் அவர் தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டவர் விசித்ரா என்று கூறப்படுகிறது. விசித்ரா ஓரளவு நல்ல வாக்குகள் பெற்று இருந்த அவர் வெளியேற்றப்படுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மாயாவை எப்படியும் ஃபைனலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சேனல் நிர்வாகம் மற்றும் கமல்ஹாசன் முடிவு செய்தது தான் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும் இது மக்களை ஏமாற்றம் ஒரு நிகழ்ச்சியாக மாறியுள்ளது என்றும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva