Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜீத்தின் விவேகம் ரிலீஸ் தேதிக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?


Sugapriya Prakash| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (15:29 IST)
அஜீத்தின் விவேகம் படம் விஜய்யின் பிறந்தநாள் அன்று ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

 
 
சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போட்டு, வில்லன் விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த ஒரு வாரமாக படமாக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் விவேகம் குழு விரைவில் பல்கேரியா செல்ல உள்ளதாம். மேலும், அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கிறதாம். 
 
இந்நிலையில் ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூன் மாதம் 22ம் தேதி ரிலீஸாக உள்ளதாம். ஜூன் 22ம் தேதி இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :