திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (11:53 IST)

'கங்குவா’ ரிலீஸ் தேதியில் தான் ‘வேட்டையன்’ ரிலீஸா?.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யா நடித்த 'கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்பதும் இதனால் இந்த படம் போட்டியின்றி வெளியானால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி இருப்பதை அடுத்து உலகம் முழுவதும் அக்டோபர் 10ஆம் தேதி அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
'கங்குவா’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில் வேட்டையன் ரிலீஸ் ஆவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran