செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (15:32 IST)

'தலைவர் 170’ படத்தின் டைட்டில் இதுதான்.. இரண்டு பிரபலங்கள் இணைந்ததாக தகவல்..!

thalaivar 170
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் இணையதளத்தில் கசிந்துள்ளதோடு இந்த படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ’
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
 
தலைவர் 170 என்று கூறப்படும் இந்த படத்தின் டைட்டில் ’வேட்டையன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த படத்தின் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் மற்றும் பகத் பாஸில் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை  லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran