வியாழன், 31 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (11:07 IST)

சூரிக்காகக் காத்திருக்கும் வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் முதல் கட்டமாக நடந்து முடிந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி அதற்காக சில நாட்கள் நடித்தும் முடித்துக் கொடுத்துள்ளார். இந்த படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் காடுகளின் உள்ளே அடர் வனப்பகுதிகளில் நடந்து வந்தது.

முதல் கட்ட படப்பிடிப்புக்குப் பின்னர் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் தயாராக உள்ளனர். ஆனால் கதாநாயகன் சூரி டான் மற்றும் சூர்யா 40 ஆகிய படங்களில் நடிக்க சென்றுவிட்டதால் அவர் வருவதற்காக காத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்துக்காக சூரி கொடுத்த தேதிகள் அனைத்தும் விரயமானதால் இப்போது சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.