Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெற்றிமாறனின் வட சென்னை நிறுத்தப்பட்டது... படம் ட்ராப்?

Sasikala| Last Modified திங்கள், 9 ஜனவரி 2017 (10:23 IST)
வெற்றிமாறன் பல வருடங்களாக தனது கனவுப் படம் என்று கூறி வருவது, வட சென்னை படத்தை. தனுஷை வைத்து  எடுப்பதாக இருந்த இந்தப் படத்தில் பிறகு கார்த்தி நடிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு சிம்பு. இறுதியில் தனுஷை வைத்து  சென்ற வருடம் படப்பிடிப்பை தொடங்கினர்.

 
முதலில் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது ஷெட்யூல்ட்  தொடங்கப்படாமல் முடங்கியது. விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார். தற்போது படவேலைகள் முழுமையாக  நிறுத்தப்பட்டுள்ளன.
 
தனுஷ் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் வட சென்னை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமாதானம் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :