1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 24 ஜூன் 2017 (17:27 IST)

‘பார்ட்டி’யில் இருந்து யுவன் சங்கர் ராஜாவைக் கழட்டிவிட்ட வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படத்துக்கு, பிரேம்ஜி இசை அமைக்கிறார்.



 


அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில், ‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தில், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். வழக்கமாக, வெங்கட் பிரபுவின் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். ஆனால், இந்தப் படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.

எப்போதும் தன் அண்ணனின் படங்களில் ஒரு ஸீனிலாவது தலைகாட்டிவிடும் பிரேம்ஜி, இந்தப் படத்தில் நடிக்கவில்லை; இசை மட்டுமே அமைக்கிறார். இதுவரை ஏழெட்டு மொக்கைப் படங்களுக்கு இசையமைத்துள்ள பிரேம்ஜி, முதன்முறையாக இசையமைக்கும் பெரிய படம் இது. யுவனுக்குப் பதில் பிரேம்ஜி ஏன்? என்று கேட்டால், ‘இது சிறிய பட்ஜெட் படம். யுவன் வாங்கும் சம்பளத்தைத் தரமுடியாது’ என்ற பதில் வருகிறதாம். ஆனால், நடிகர்களின் பட்டியலைப் பார்த்தால், இது சிறிய பட்ஜெட் படம் போலத் தெரியவில்லை.

38 வயதாகும் பிரேம்ஜி, இதுவரை உருப்படியாக எதுவும் செய்ததில்லை. லூசுத்தனமாக நடிப்பதை விட்டுவிட்டு, வேறெதிலாவது கவனத்தை திருப்பச் சொல்லிவிட்டார்களாம் குடும்பத்தினர். எனவே, தம்பிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருவதற்காக இந்த ஏற்பாடாம்.