நடிகைகளை அழைத்துக்கொண்டு தீவுக்குப் பறக்கும் வெங்கட் பிரபு


cauveri manickam| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (11:52 IST)
வெங்கட் பிரபு இயக்கவுள்ள ‘பார்ட்டி’ படம் தீவில் படமாக உள்ளதால், படக்குழுவினருடன் அங்கு செல்கிறார்.

 

 
’சென்னை 28’ இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பார்ட்டி’. ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், சம்பத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். முதன்முறையாக அண்ணனின் படத்துக்கு இசையமைக்கிறார் பிரேம்ஜி. ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

பிஜி தீவில்தான் இந்தப் படத்தின் முழு ஷூட்டிங்கும் நடைபெற இருக்கிறது. இதற்காக வருகிற 15ஆம் தேதி ஒட்டுமொத்த படக்குழுவும் பிஜி தீவுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். 20ஆம் தேதி தொடங்கும் படப்பிடிப்பு, இடைவெளியின்றி தொடர்ந்து 52 நாட்களுக்கு அங்கேயே நடைபெறுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :