ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (09:57 IST)

பாக்யராஜின் சின்னவீடு போல இருக்கும்… தன் படம் பற்றி பேசிய வெங்கட்பிரபு!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள மன்மதலீலை திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியானது. மன்மதலீலை என்ற தலைப்பில் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் பாலசந்தர் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் பெயருக்கேற்றவாறு 18+ விஷயங்களை மிக அதிகமாகவே சேர்த்துள்ளாராம் வெங்கட் பிரபு. படத்தின் கதாநாயகனின் வாழ்க்கையில் இருவேறு கால கட்டங்களில் நடக்கும் கதைக்களத்தை வைத்து உருவாக்கியுள்ளாராம். இந்நிலையில் படம் பற்றிக் கூறியுள்ள அவர் ‘ 1980 களில் வந்த பாக்யராஜின் சின்னவீடு ஸ்டைலில் இந்த படம் இருக்கும். நானும் என் உதவியாளர் மணிகண்டனும் லாக்டவுன் நாட்களில் இதைப்பற்றி விவாதித்தோம். சுவாரஸ்யமாக இருந்ததால் அவரை இந்த திரைக்கதையை எழுத சொன்னேன்’ எனக் கூறியுள்ளார். முதல் முதலாக தன்னுடைய உதவியாளர் கதையை வெங்கட்பிரபு படமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.