செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 25 மே 2017 (05:36 IST)

வெங்கட்பிரபுவின் அடுத்த படம் அரசியல் கதையா? இன்று முதல் வேட்பாளர்கள் அறிமுகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்முறையாக சீரியஸாக அரசியலுக்கு வருவது குறித்து பேசியதில் இருந்தே தமிழக அரசியலே பரபரப்பாகி வருகிறது.. இந்த நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் அரசியல் படம் என்று கூறப்படுகிறது.



 


வெங்கட்பிரபுவின் தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு படம் குறித்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் 'இன்று முதல் வேட்பாளர்கள் அறிமுகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவருடைய அடுத்த படம் அரசியல் படமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் டாக்டர் ராஜசேகர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகிறார் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று வெங்கட்பிரபு தனது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். இன்றுதான் ரஜினி-ரஞ்சித் படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.