செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 ஜனவரி 2022 (07:22 IST)

சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க போவது ஏன்? ஐசரி கணேஷ் விளக்கம்!

சிம்புவின் திரையுலக சேவையை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக வேல்ஸ் யுனிவர்சிட்டியின் வேந்தர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப் போவது ஏன் என்பது குறித்து ஐசரி கணேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். 
 
அந்தவகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.நடிப்பு,இயக்கம்,இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம்.அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி