திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 மே 2022 (11:02 IST)

‘ஊரே சிரிக்குதுப்பா’… வீட்ல விசேஷம் படத்தின் செம்ம ஜாலியான டாடி பாட்டு

ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் ஜாலியான பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு  வீட்ல விஷேசம் என்ற தலைப்பை வைத்துள்ளனர்..

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. வீட்ல விஷேசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜுன் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் ஐபிஎல் போட்டியின் போது  வெளியிடப்பட்டது.  இந்த டிரைலர்  இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையடுத்து தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டாடி பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை கிரிஷ் இசையில் பா விஜய் எழுத, கிரிஷுடன் இணைந்து பாலாஜியும் பாடியுள்ளார். ஜாலியான பாடலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் கவனத்தைப் பெற ஆரம்பித்துள்ளது.