ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (19:03 IST)

மீண்டும் ஒருமுறை ‘வீரமே வாகை சூடும்’ பட ரிலீஸை உறுதி செய்த விஷால்!

விஷால் நடித்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் மீண்டும் அதே தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 மேலும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் டிரைலர் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற காரணங்களால் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் விஷால் மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விஷால், டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.