செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (21:25 IST)

என்ன ட்ரெஸ் இது? என்ன போஸ் இது? நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

நடிகை வேதிகா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மதராசி படம் மூலம் அர்ஜுனுக்கு ஜோடியாக 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 
 
2007 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக முனி படத்தில் நடித்தார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
இதற்கிடையில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். பின்னர் ஒரு இடைவெளிக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு பரதேசி படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்காத இவர் இப்போது மீண்டும் காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ளார். 
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இவர் அடுத்து தெலுங்கு படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார். இதன் மூலம் 6 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் நடிக்கிறார். 
 
இதெல்லாம் இருக்க வேதிகா அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றால் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் சில...