1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (12:14 IST)

பத்து லட்சம் ஹிட்ஸ்கள், ஒரு லட்சம் லைக்குகள் - வேதாளம் சார்... நீங்க எங்கியோ போய்டீங்க

படத்தின் ட்ரெய்லருக்கும், டீஸருக்கும் கிடைக்கும் ஹிட்ஸ்களையும், லைக்குகளையும் வைத்தே இப்போது நடிகர்களின், ஸ்டார் பவர் கணக்கிடப்படுகிறது. வேதாளம் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.


 

 
நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வேதாளம் படத்தின் டீஸரை வெளியிட்டனர். நேற்று மாலைக்குள் டீஸர் பத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்து சாதனைப் படைத்தது. இரவுக்குள் ஒரு லட்சம் லைக்குகளை டீஸர் பெற்றது. 
 
குறுகிய நேரத்தில் இவ்வளவு அதிக ஹிட்ஸ்களையும், லைக்குகளையும் வேறு எந்தத் தமிழ்ப் படமும் பெற்றதில்லை.
 
மேலும், ஒரு மாதத்தில் புலி படம் பெற்ற ஒரு லட்சம் லைக்குகளை வேதாளம் ஒரே நாளில் பெற்றிருக்கிறது.
 
படத்தின் டீஸரும் சிறப்பாக இருப்பதால், அஜித்தின் திரைவாழ்க்கையில் வேதாளம் புதிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேதாளம் டீஸர் கீழே: