வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 செப்டம்பர் 2018 (13:31 IST)

எப்படி இருந்த அர்ஜுன் ரெட்டி! எப்படி வந்துருக்கு?- வர்மா டீசர்….

கடந்த ஆண்டின் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்தின் டீசர் வெளியானது.

 
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாக பாலா இயக்கும் வர்மா படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பாலா  படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும், துருவ் சிறந்த நடிகனாக வருவார், விக்ரம் அளவுக்கு தனக்கு துருவ் கஷ்டம் கொடுக்கவில்லை’ என்றும் கிண்டலாகக் கூறினார்.
 
டீஸர் வெளியாகி ஒரு பக்கம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் ஒரு சிலர் டீஸரை அர்ஜுன் ரெட்டியின் டீசரோடு ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். டீசரில் துருவ் தாடி இல்லாமல் மருத்துவக் கல்லூரி மாணவனாக ஒரு தோற்றத்திலும் தாடியோடு போதைக்கு அடிமையான மருத்துவராக மற்றொரு தோற்றத்திலும் வருகிறார்.

 
இந்த தோற்றங்களை முன்வைத்து விஜய் தேவாரகொண்டாவிடம் இருந்த கோபக்கார இளைஞன் தோற்றம் துருவிற்கு பொருந்தவில்லை என்றும் துருவ் பார்ப்பதற்கு ஸ்கூல் பையன் போல உள்ளதாகவும் ரசிகர்கள் கிண்டலடித்தும் மீம்ஸ் உருவாக்கியும் சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர்.