1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (17:49 IST)

வாரிசு இசை வெளியீட்டு விழா: சன் டிவியில் ஒளிபரப்பாவது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

varisu
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
 
விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட விழா ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யின் பேச்சை அவரது ரசிகர்கள் ரசித்து கேட்டனர் என்பதும் குறிப்பாக அவர் சொன்ன இரண்டு குட்டிகதைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது என்பது குறிபிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வரும் ஜனவரி 1ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்ப இருப்பதாக சன் டிவி அறிவித்துள்ளது. மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த இசை நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran