வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (09:37 IST)

வாரிசு & துணிவு இரண்டு படங்களுக்கும் நள்ளிரவுக் காட்சிகள்… !

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகின்றன.

9 ஆண்டுகளுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது விஜய்யின் ஜில்லா திரைப்படமும், அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகின. அதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆகின்றன.

இதனால் இப்போதே இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் வார்த்தை மோதல்கள் சமூகவலைதளங்களில் ஆரம்பித்துவிட்டன. துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதியும், வாரிசு படம் ஜனவரி 12 ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில் இரண்டு படங்களுக்குமே நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சிகள் அனுமதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதற்கான அனுமதி வாங்கும் வேலைகள் நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.