Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தளபதி விஜய் படத்தில் முதன்முதலாக இணையும் வரலட்சுமி

Last Updated: திங்கள், 5 மார்ச் 2018 (22:34 IST)
சிம்பு நடித்த 'போடா போடி' படத்தில் அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்த நடிகை வரலட்சுமிக்கு பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிந்தது

இந்த நிலையில் தற்போது அவர் தனுஷுடன் மாரி 2, விஷாலுடன் 'சண்டைக்கோழி 2, சத்யராஜூடன் 'எச்சரிக்கை', கவுதம் கார்த்திக்குடன் Mr.சந்திரமெளலி, விமலுடன் 'கன்னிராசி', போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முதன்முதலாக விஜய்யுடன் அவர் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். முதன்முதலாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ள வரலட்சுமிக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :