திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (14:21 IST)

ஐஸ்வர்யா ராய் குடும்பத்தை சந்தித்த வரலக்ஷ்மி சரத்குமார்!

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது புதுச்சேரியில் நடந்து வரும் ஷூட்டிங்கில் ஐஸ்வர்யா ராய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அவர் கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆரத்யா புதுச்சேரி வந்துள்ளனர். 
 
அவர்களை வரலக்ஷ்மி சரத்குமார் நேரில் சென்று சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, " நேற்றிரவு 3 தாழ்மையான மக்களை சந்தித்தேன். அழகான அமிதாப் பச்சன், அவர்களின் இனிமையான மகள் ஆரத்யா பெரிய பரம்பரையில் இருந்து வந்தும் அவர்களின் மனத்தாழ்மையும் அரவணைப்பும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 
 
நான் அவர்களின் அன்பால் மூழ்கிவிட்டேன். எங்களை சந்தித்து எங்களுடன் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு மிகவும் இனிமையாக இருந்தது .. கடவுள் உங்கள் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் உங்கள் குடும்பத்தின் மீது பொழிவார். இதைச் செய்ததற்கு நன்றி அப்பா என கேப்ஷன் கொடுத்துள்ளார். அவர்களுடன் சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.